சங்கீதம்97tam_tcv

1யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்;தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.2மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன;நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.3நெருப்பு அவருக்கு முன்சென்று,சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.4அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது;பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.5யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவேமலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது;எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும்,விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்;தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
8யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால்சீயோன் கேட்டுக் களிகூருகிறது;யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.9யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்;எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.10யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்;ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி,கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.11நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது,இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.12நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள்,அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.