சங்கீதம்95tam_tcv

1வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்;நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.2நன்றியுடன் அவர்முன் வருவோம்;இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
3யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்;எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.4பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன;மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
6வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாகநாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;நாம் முழங்காலிடுவோம்.7அவரே நம் இறைவன்;நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும்அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம்.இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,8“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும்,பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும்,உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.9அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்;நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.10நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்;‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும்,என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.11எனவே கோபங்கொண்டு,‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று,ஆணையிட்டு அறிவித்தேன்.”