சங்கீதம்93tam_tcv

1யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்;யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்;உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.2உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது;நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர்.
3யெகோவாவே, கடல்கள் எழும்பின;கடல்கள் தங்கள் குரலை எழுப்பின;கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின.4பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும்,கடல்களின் அலைகளைப் பார்க்கிலும்உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
5யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன;பரிசுத்தம் உமது ஆலயத்தைஎன்றென்றும் அலங்கரிக்கிறது.