சங்கீதம்87tam_tcv
கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம்.
1யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.2யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும்,சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.3இறைவனின் நகரமே,உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:4“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடுநான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து,‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்;பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”5உண்மையாகவே சீயோனைக் குறித்து,“இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும்,மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.6“இன்னார் சீயோனிலே பிறந்தார்”என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.7அவர்கள் இசை மீட்டும்பொழுது,“எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.