சங்கீதம்84tam_tcv
கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!2என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காகஏங்கித் தவிக்கிறது;என் உடலும் உள்ளமும்உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.3என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,உம்முடைய பீடத்தினருகேஅடைக்கலான் குருவிக்கு வீடும்,இரட்டைவால் குருவிக்குத்தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.4உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.5உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.6அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில்,அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்;முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.7அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும்,பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.8சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.9எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்;நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.10உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது,வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது;கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட,என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.11ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்;யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்;குற்றமற்றோராய் நடப்போருக்குஅவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.12சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.