சங்கீதம்8tam_tcv
கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது!நீர் வானங்களுக்கு மேலாகஉமது மகிமையை வைத்திருக்கிறீர்.2உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாகவல்லமையை உறுதிப்படுத்தினீர்.3உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்அவற்றில் நீர் பதித்து வைத்தசந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றிநான் சிந்திக்கும்போது,4மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?5நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.6உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;அனைத்தையும்:7எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும்காட்டு மிருகங்களையும்8ஆகாயத்துப் பறவைகளையும்கடல் மீன்களையும்கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!