சங்கீதம்76tam_tcv
கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம்.
1யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்;இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.2அவருடைய கூடாரம் சாலேமில் இருக்கிறது;அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.3அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும்,கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.4நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்;வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.5வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு,அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்;போர்வீரரில் ஒருவனும் தன் கைகளைஉயர்த்த முடியாமலிருக்கிறான்.6யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில்குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.7நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்;நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?8நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்;பூமி பயந்து அமைதியாய் இருந்தது.9இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காகநீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.10நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம்உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது;உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.11உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து,அவைகளை நிறைவேற்றுங்கள்.அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரானஅவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.12அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்;பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.