சங்கீதம்70tam_tcv
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்;யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.2என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;எனது அழிவை விரும்புகிற யாவரும்அவமானமடைந்து திரும்புவார்களாக.3என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்,அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.4ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;உமது இரட்சிப்பை விரும்புவோர்,“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.5நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;இறைவனே, என்னிடம் விரைந்து வாரும்.நீரே என் துணை, நீரே என் மீட்பர்;யெகோவாவே, தாமதியாதேயும்.