சங்கீதம்69tam_tcv
“லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1இறைவனே, என்னைக் காப்பாற்றும்;வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது.2கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்;ஆழமான வெள்ளத்தில்நான் அகப்பட்டு விட்டேன்;வெள்ளம் என்னை மூடுகிறது.3சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்;என் தொண்டையும் வறண்டுபோயிற்று;என் இறைவனைத் தேடிஎன் கண்கள் மங்கிப்போயின.4காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்;அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்;அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள்.நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்ககட்டாயப்படுத்தப்படுகிறேன்.5இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்;என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.6சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே,உமக்காகக் காத்திருக்கிறவர்கள்என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக;இஸ்ரயேலின் இறைவனே,உம்மைத் தேடுகிறவர்கள்என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக.7உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்;வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது8நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும்என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன்.9ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது;உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது.10நான் அழுது உபவாசித்தபோது,அவர்கள் என்னை நிந்தித்தார்கள்.11நான் துக்கவுடை உடுத்தும் போது,அவர்களுக்குப் பழமொழியானேன்.12நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்;நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.13ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே,நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம்நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.14சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும்,என்னை மூழ்கிப்போக விடாதேயும்;என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும்ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும்.15வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்;ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்;சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.16யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது;உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.17உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும்,விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன்.18என்னருகே வந்து என்னைத் தப்புவியும்;என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.19என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்;என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.20நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால்நான் களைத்துப் போனேன்.நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை;ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை.21அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்;என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக.23அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும்,அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்.24உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக.25அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக;அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக.26ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி,நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.27அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்;அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும்.28வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக;நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.29நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்;இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.30நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.31காணிக்கையாகக் கொடுக்கும்கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.32இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்;இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக!33யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்;சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.34வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்;கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.35இறைவன் சீயோனை மீட்டு,யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்;அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.36அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்;அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.