சங்கீதம்68tam_tcv

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு.

1இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக;அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.2காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்;நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல,இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக.3ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்துஇறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக;அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.
4இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்;மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்;யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.5இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில்தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும்விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.6இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்;சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்;கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.
7இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று,அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில்,8சீனாய் மலையின் இறைவனுக்குமுன்,இஸ்ரயேலின் இறைவனுக்குமுன்பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன.9இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்;இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர்.10உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்;இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.
11யெகோவா வார்த்தையை அறிவித்தார்;அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்:12“இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்;வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.13நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும்,வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும்பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.”14எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்ததுசல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.
15பாசான் மலை இறைவனுடைய மலை;பாசான் மலை சிகரங்களையுடைய மலை.16சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்?அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்;அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார்.17இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும்,ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன;யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார்.18நீர் மேலே ஏறிச்சென்றபோது,சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்;மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்;இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.
19தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும்இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.20நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்;வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.21இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்;தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ளஉச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார்.22யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்;நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன்,23அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்;உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”
24என் இறைவனும் என் அரசனுமானவர்,பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர்.25முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்;அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள்.26மகா சபையில் இறைவனைத் துதியுங்கள்.இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்;27சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்;பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும்,செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.
28இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்;எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோலஉமது பலத்தை எங்களுக்குக் காண்பியும்.29எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காகஅரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.30நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்;கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்;அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்;யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும்.31எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்;எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள்.
32பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்;யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.33வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை,வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள்.34இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்;அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது;அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது.35இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்;இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார்.இறைவனுக்குத் துதி உண்டாவதாக!