சங்கீதம்67tam_tcv
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக;அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.2இறைவனே, உமது வழிகள் பூமியிலும்,உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.3இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.4நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து,பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால்,மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.5இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.6அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்;இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.7இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்;ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.