சங்கீதம்66tam_tcv

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.

1பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!2அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.3இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!உமது வல்லமை பெரிதானது;அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.4பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
5இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.6அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;வாருங்கள், அவரில் களிகூருவோம்.7அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
8எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.9அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.10இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.11எங்களைச் சிறைபிடித்து,எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.12மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
13நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.14நான் துன்பத்திலிருந்தபோதுஎன் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.15நான் கொழுத்த மிருகங்களையும்செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
16இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.17நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;அவருடைய துதி என் நாவில் இருந்தது.18என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;19இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.20என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்தஇறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.