சங்கீதம்62tam_tcv

எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது;என் இரட்சிப்பு அவரால் வருகிறது.2அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்;நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்.
3எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்?நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா?நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன்.4என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்குஅவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்,அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்;அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள்,ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள்.
5ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.6அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.7என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;இறைவனே நமது புகலிடம்.
9கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே,உயர்குடி மனிதர் வெறும் பொய்யே;தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை;அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள்.10பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே;களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே;உனது செல்வங்கள் அதிகரித்தாலும்,உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே.
11இறைவன் ஒருமுறை பேசினார்,நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்:“இறைவனே, வல்லமை உமக்கே உரியது,12ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”;நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும்அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.”