சங்கீதம்6tam_tcv

கம்பியிசைக் கருவிகளுடன் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இசைக்குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்

1யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்;உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்;2யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்;யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.3என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது.எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?
4யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்;உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.5இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை.பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
6நான் கலங்கியே இளைத்துப் போனேன்.இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி,நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.7என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன;என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.
8அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.9இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்;யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.10என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்;அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.