சங்கீதம்59tam_tcv
தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம்.
1இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்;எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.2தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.3அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்!யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க,சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள்.4நான் ஒரு தவறும் செய்யவில்லை;இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்.எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்!5சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,இஸ்ரயேலின் இறைவனே,இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்;கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.6மாலையிலே அவர்கள்நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.7அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்;அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை,அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள்.8ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்;அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.9நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்;இறைவனே, நீரே என் கோட்டை,10நான் சார்ந்திருக்கும் இறைவன்.தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார்.என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார்.11எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்;அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி,அவர்களைத் தாழ்த்திவிடும்.12அவர்களுடைய உதடுகளின் பேச்சு,அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது;அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும்,அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.13உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்;அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும்.அப்பொழுது இறைவன்,யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்றுபூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.14மாலையிலே அவர்கள்நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.15உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்;திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள்.16ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;ஏனெனில் நீரே எனது கோட்டையும்துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.17என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;இறைவனே, நீரே என் கோட்டையும்,என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.