சங்கீதம்56tam_tcv

பெலிஸ்தியர் தாவீதை காத் ஊரில் பிடித்தபோது, “தொலைவில் உள்ள கருவாலி மரத்தில் வாழும் மெளன மாடப்புறா” என்ற இசையில் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

1இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,மனிதன் என்னை தாக்குகிறான்;நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான்.2என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்;அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள்.
3நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன்.4நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்;அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்.அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
5எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே.6அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள்,என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய்மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள்.7அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்;இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும்.
8நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்;என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்;அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா?9நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது,என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்;அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.
10நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்;யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன்.11நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
12இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்;நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன்.13ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர்,என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்;இதினால் நான் இறைவனுக்கு முன்பாகவாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.