சங்கீதம்55tam_tcv
கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்குப் ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.
1இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும்.2எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்;என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன்.3எதிரியின் வார்த்தையினாலும்கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்;அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து,கோபத்தில் என்னை பகைக்கிறார்கள்.4என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது;மரணபயம் என்னைத் தாக்குகின்றன.5பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன;பயங்கரம் என்னை மூடிக்கொண்டது.6நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்!பறந்துபோய் இளைப்பாறுவேன்.7நான் தொலைவில் தப்பிப்போய்பாலைவனத்தில் தங்குவேன்.8கடும் காற்றுக்கும் புயலுக்கும்தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.9யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி,அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்;ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன்.10அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்;கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன.11பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது;அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.12என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல;அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்;எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால்,நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.13ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும்,எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.14நாங்கள் ஒன்றுகூடிஇனிய ஆலோசனைபண்ணி,மக்கள் கூட்டத்துடன்இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.15மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்;தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால்,அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக.16நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்;யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.17மாலையிலும் காலையிலும்மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்;அவர் என் குரலைக் கேட்பார்.18பலர் என்னை எதிர்த்தபோதும்,எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்துஅவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார்.19சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு,அவர்களைத் தாழ்த்திவிடுவார்;அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை,ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை.20என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்;அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான்.21அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது,ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது;அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை,ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன.22உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்;அவர் உங்களைத் தாங்குவார்;நீதிமான்களை அவர்ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.23ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனைஅழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்;இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும்தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள்.ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்.