சங்கீதம்5tam_tcv

புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,என் பெருமூச்சைக் கவனியும்.2உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,என் அரசனே, என் இறைவனே,உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
3யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.4நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.5திமிர் பிடித்தவர்கள்உமது சமுகத்தில் நிற்கமுடியாது;அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.6பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்யெகோவா அருவருக்கிறார்.7ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலேஉமது வீட்டிற்கு வந்து,உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கிபயபக்தியுடன் வணங்குவேன்.
8யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்;உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.9அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது;அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி;அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.10இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும்.அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்;ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள்.11ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
12யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.