சங்கீதம்46tam_tcv
அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல்.
1இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார்,ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.2ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும்மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும்3கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும்அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.4ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும்பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.5இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது;அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.6நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன;யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.8யெகோவாவினுடைய செயல்களையும்அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.9யெகோவா பூமியின் கடைசிவரையுத்தங்களை நிறுத்துகிறார்;அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்;கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.10யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்துநானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்.நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன்,நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”11சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.