சங்கீதம்38tam_tcv

நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்;உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.2உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன;உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.3உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை;என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.4நான் தாங்கமுடியாத சுமையைப்போலஎன்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
5என் மதிகேட்டினால்எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.6நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்;நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.7எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது;என் உடலில் சுகமே இல்லை.8நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்;உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
9யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.10என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது;என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.11எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம்,என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்.என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.12என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்;நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.14காது காதுகேட்காதவனும்,தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.15யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.16“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்;அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.
17நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்;என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.18என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்;என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.19காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்;எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.20நான் நன்மையானதைச் செய்தபோதும்,நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள்என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.
21யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்;என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.22என் இரட்சகராகிய யெகோவாவே,எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.