சங்கீதம்34tam_tcv
தாவீது அபிமெலேக்கின் முன்பு பைத்தியம்போல் நடித்து, அவனால் துரத்திவிடப்படும்போது பாடின சங்கீதம்.
1யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்;அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும்.2நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்;ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும்.3என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.4நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்;அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார்.5அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்;அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து;அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.7அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும்யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.9யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்;ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.10இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்;ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை.11என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்;யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.12உங்களில் யாராவது வாழ்வை நேசித்துஅநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால்,13நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி,உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.14தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்;சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.15யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன;அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன;16ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவைபூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி,யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.17நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்;அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.18யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்;ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்.19நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம்,ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார்.20அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்;அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது.21தீமை கொடியவர்களைக் கொல்லும்;நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள்.22யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்;அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.