சங்கீதம்33tam_tcv
1நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்;அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.2யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்;பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.4யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும்,அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.5யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்;பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.6யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன,அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.7அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்;ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.8பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.9ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று;அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.10யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்;அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.11ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும்,அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.12எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ,எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோஅவர்கள் பாக்கியவான்கள்.13யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து,எல்லா மனிதர்களையும் காண்கிறார்;14தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும்அனைவரையும் கவனிக்கிறார்.15அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா,அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.16எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை;எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.17விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்;அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.18யெகோவாவுக்குப் பயந்து,அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,19மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார்,பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.20நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.21நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால்எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.