சங்கீதம்31tam_tcv
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.2உமது செவியை எனக்குச் சாய்த்து,என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்;என் புகலிடமான கன்மலையாகவும்,என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.3நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.4நீரே என் புகலிடம்,ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.5உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்;யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.6இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்;நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.7நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்;ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு,என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.8நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல்,விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.9யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்;துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன;துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன.10என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று;அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று.என் துன்பத்தினால் என் பெலம் குன்றி,என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன.11என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம்நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்;என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்;தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள்.12நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்;நான் ஓர் உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.13அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன்,“எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!”அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து,என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள்.14ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்;“நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன்.15என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது;என் பகைவரிடமிருந்தும்என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும்.16உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்;உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும்.17யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்;நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில்மவுனமாய்க் கிடக்கட்டும்.18பெருமையோடும் அகந்தையோடும்,நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும்அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும்.19உமக்குப் பயப்படுகிறவர்களுக்காகநீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன;உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல்,மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன.20நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி,உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்;அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி,உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர்.21யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது,அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார்.22நான் அதிர்ச்சியடைந்து,“உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்;ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர்.23யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்!யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்;ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.24யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.