சங்கீதம்30tam_tcv

ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.2என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;நீர் என்னை சுகமாக்கினீர்.3யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
4யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.5அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;இரவிலே அழுகை இருந்தாலும்,காலையிலோ மகிழ்ச்சி வரும்.
6நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.7யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,நான் மனம்சோர்ந்து போனேன்.
8யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.9“நான் அழிந்துகுழிக்குள் போவதால் என்ன பயன்?தூசி உம்மைத் துதிக்குமோ?அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?10யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”
11என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.12ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.