சங்கீதம்29tam_tcv
தாவீதின் சங்கீதம்.
1பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.2யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.3யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;மகிமையின் இறைவன் முழங்குகிறார்;பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.4யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.5யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.6அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,சிரியோன் மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.7யெகோவாவினுடைய குரல்மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.8யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.9யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.காடுகளை அழித்து வெளியாக்குகிறது;அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.10யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.