சங்கீதம்28tam_tcv
தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;நீர் என் கன்மலை,எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம்.நீர் மவுனமாகவே இருப்பீரானால்,நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.2நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக,என் கைகளை உயர்த்திஇரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.3கொடியவர்களுடனும்தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும்,அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்;ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள்.4அவர்களுடைய செயல்களுக்காகவும்அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்;அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து,அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.5யெகோவாவினுடைய செயல்களுக்கும்,அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால்,யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்;மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.6யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்;ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.7யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.8யெகோவா தமது மக்களின் பெலனானவர்;தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.9இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி,உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்;அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.