சங்கீதம்27tam_tcv
தாவீதின் சங்கீதம்.
1யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,நான் யாருக்குப் பயப்படுவேன்?யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,நான் யாருக்குப் பயப்படுவேன்?2தீய மனிதர் என்னை விழுங்கும்படிஎனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,எனது பகைவரும் விரோதிகளுமானஅவர்களே தடுமாறி விழுவார்கள்.3ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,என் இருதயம் பயப்படாது;எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.4நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,அதையே நான் தேடுகிறேன்:நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்நான் என் வாழ்நாள் முழுவதும்யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.5ஏனெனில் துன்ப நாளில்,அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.6அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ளபகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு,யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.7யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்;என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.8என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால்,யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.9உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்;நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர்.என் இரட்சிப்பின் இறைவனே,என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.10என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்,யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம்என்னை நேரான பாதையில் நடத்தும்.12என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்;ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும்என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.13நானோ வாழ்வோரின் நாட்டில்யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்றுஇதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.14யெகோவாவுக்குக் காத்திரு;பெலன்கொண்டு தைரியமாயிரு,யெகோவாவுக்கே காத்திரு.