சங்கீதம்2tam_tcv

1நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?2பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்,ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும்,அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:3“அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து,அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
4பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்;யெகோவா அவர்களை இகழ்கிறார்.5அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து,தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:6“நான் எனது அரசனைஎன் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்.”7நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்:அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்;இன்று நான் உமக்குத் தந்தையானேன்.8என்னிடம் கேளும்,நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன்,பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.9நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்;மண்பாண்டத்தை உடைப்பதுபோல்,நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
10ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.11பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.12இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்;நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்;ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும்.அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.