சங்கீதம்150tam_tcv

1அல்லேலூயா,இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.அல்லேலூயா.