சங்கீதம்147tam_tcv

1யெகோவாவைத் துதியுங்கள்.நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது,அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது.
2யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்;அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார்.3அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி,அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.5நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்;அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.6யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்;ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.
7யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்;யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.
8அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்;பூமிக்கு மழையைக் கொடுத்து,மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார்.9மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும்அவர் உணவு கொடுக்கிறார்.
10குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை,படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை;11யெகோவா தமக்குப் பயந்து,தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில்வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
12எருசலேமே யெகோவாவைப் பாராட்டு;சீயோனே உன் இறைவனைத் துதி.
13ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார்.14அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து,சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்;அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.16அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்;உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.17அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்;அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.
19அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும்,தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.20அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை;அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள்.யெகோவாவைத் துதி.