சங்கீதம்146tam_tcv

1யெகோவாவைத் துதி .என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.3உன் நம்பிக்கையை இளவரசர்களிலும்,உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.4அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்;அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.5யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர்,தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம்நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
6அவரே வானத்தையும் பூமியையும்கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்;யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,8யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார்,யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்,யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.9யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார்,அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்,ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
10யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்;சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.யெகோவாவைத் துதி.