சங்கீதம்143tam_tcv

தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்,இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்;உமது உண்மையின்படியும்நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.2உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும்.வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.3பகைவன் என்னைப் பின்தொடர்கிறான்,அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்;வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல்,அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.4ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது;பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.5நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.6நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
7யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்;என் உள்ளம் சோர்ந்துபோகிறது;உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால்,நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.8காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.9யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்;ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.10நீரே என் இறைவன்;ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்;உமது நல்ல ஆவியானவர்என்னை நல்வழியில் நடத்துவாராக.
11யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.12உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்;என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்;ஏனெனில் நான் உமது அடியவன்.