சங்கீதம்132tam_tcv

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1யெகோவாவே, தாவீதையும்அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
2அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு,யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:3“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன்,என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.4என் கண்களுக்கு நித்திரையையும்,கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.5யெகோவாவுக்காக ஒரு இடத்தை,யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரைஇவற்றைச் செய்யமாட்டேன்.”
6எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு,யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:7“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம்,அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.8‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும்,உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்;உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
10உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம்,நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
11யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்;அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்:“உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனைநான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.12உன் மகன்கள் என் உடன்படிக்கையையும்,நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால்,அவர்களுடைய மகன்களும்என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”
13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்;அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:14“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்;இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால்,இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.15நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்;அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.16அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்;அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
17“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்;நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.18அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்;ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”