சங்கீதம்130tam_tcv

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.2யெகோவாவே, என் குரலைக் கேளும்;இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலைஉமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
3யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால்,யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?4ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்யஉம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.6விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
7இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக;ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும்,அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.8அவர்தாமே இஸ்ரயேலரைஅவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.