சங்கீதம்128tam_tcv
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.2உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.3உன் மனைவி உன் வீட்டிற்குள்கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.4ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;உன் வாழ்நாட்களெல்லாம்எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.