சங்கீதம்125tam_tcv
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.3நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல்,கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது;இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத்தங்கள் கைகளை நீட்டலாம்.4யெகோவாவே, நல்லவர்களுக்கு,இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.5குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ,யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார்.இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.