சங்கீதம்122tam_tcv
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1“யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்”என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.2எருசலேமே, எங்கள் கால்கள்உன் வாசல்களில் நிற்கின்றன.3நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல்,எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.4யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு,கோத்திரங்கள் அங்கு போவார்கள்;இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி,யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.5தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன;அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.6எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்:“உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.7உன் மதில்களுக்குள் சமாதானமும்,உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”8என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும்“உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.9எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால்,நான் உன் செழிப்பைத் தேடுவேன்.