சங்கீதம்121tam_tcv

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன்.எங்கிருந்து எனக்கு உதவி வரும்?2வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே,எனக்கு உதவி வரும்.
3அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்;உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.4இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர்,உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5யெகோவா உன்னைக் காக்கிறவர்;யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.6பகலில் சூரியனோ,இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்;அவர் உன் வாழ்வைக் காப்பார்.8யெகோவா உன் போக்கையும் வரத்தையும்இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.