சங்கீதம்112tam_tcv
1அல்லேலூயா.யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.2அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.3செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.4நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.5தாராள மனதுடன் கடன்கொடுத்து,தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.6நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.7துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.8அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.9அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது;அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.10கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்;கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.