சங்கீதம்111tam_tcv
1அல்லேலூயா,நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும்நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.2யெகோவாவின் செயல்கள் மகத்தானவை;அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.3அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை;அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.4அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்;யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.5அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்;அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.6அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து,தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.7அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை;அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.8அவை என்றென்றும் உறுதியானவை;உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.9அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்;அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்;பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.நித்தியமான துதி அவருக்கே உரியது.