சங்கீதம்109tam_tcv

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.2கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.3அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.4அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.5அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.
6என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.8அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.9அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,அவன் மனைவி விதவையாகட்டும்.10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.11கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.12ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.13அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;அவன் பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.14அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.15ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமேயெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.
16ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.17சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.18அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.19சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.20என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.
21ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.22ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.23நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.24உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;என் உடல் மெலிந்து போயிருக்கிறது.25என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.
26யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.27யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.28அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.29என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.
30நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.31ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்துஅவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.