சங்கீதம்108tam_tcv

தாவீதின் சங்கீதமாகிய பாடல்.

1இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.2யாழே, வீணையே, விழித்தெழுங்கள்,நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.3யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.4ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது,அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது;உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.5இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
6நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.7இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;எப்பிராயீம் என் தலைக்கவசம்,யூதா என் செங்கோல்.9மோவாப் என் கழுவும் பாத்திரம்,நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
10அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?11இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?12பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.13இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.