சங்கீதம்102tam_tcv
பலவீனமடைந்து யெகோவாவுக்கு முன்பாக புலம்பலை ஊற்றும் ஒரு சிறுமைப்பட்டவனின் மன்றாட்டு.
1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக.2நான் துன்பத்தில் இருக்கும்போதுஉமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி,விரைவாய் எனக்குப் பதிலளியும்.3என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன;என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன.4என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று;நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன்.5என் உரத்த பெருமூச்சினால்நான் எலும்பும் தோலுமானேன்;6நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்;பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன்.7நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்;நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன்.8என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்;எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள்.9நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு,என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன்.10உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன்.நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர்.11என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது;நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன்.12ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்;உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.13நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்;இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம்,நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது.14சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன;அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள்.15நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்;பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள்.16யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி,தம் மகிமையில் காட்சியளிப்பார்.17ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்;அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.18இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி,இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:19“யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்;அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி,20அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும்,மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.”21ஆகையால் மக்களும் அரசுகளும்யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது,22சீயோனில் யெகோவாவினுடைய பெயரும்எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும்.23யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்;என் நாட்களையும் குறுகச்செய்தார்.24அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது,“இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்;உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே.25நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்;வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன.26அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்;அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்;உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்;அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.27நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர்,உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.28உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்;அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்.”