சங்கீதம்10tam_tcv

1யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?
2கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.3அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.4கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.5அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்;தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.6அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.
7அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.8அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான்.திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,9பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்;அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.10அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.11“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை”என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
12யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;ஆதரவற்றோரை மறவாதிரும்.13கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்றுஅவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?14ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.15கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும்.இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
16யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.17யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.18பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி,நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.