ஏசாயா9tam_tcv
1ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.2இருளில் நடக்கும் மக்கள்ஒரு பேரொளியைக் கண்டார்கள்;மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்வெளிச்சம் பிரகாசித்தது.3நீர் நாட்டைப் பெருகச்செய்துஅவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர்.அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல,அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள்.கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல,அவர்கள் மகிழ்கிறார்கள்.4மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல,நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்தநுகத்தை உடைத்துப்போட்டீர்.அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும்,அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர்.5ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும்,இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும்நெருப்புக்கு இரையாகசுட்டெரிக்கப்படும்.6ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்,நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்,அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும்.அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன்,நித்திய தகப்பன், சமாதானப்பிரபு”என அழைக்கப்படுவார்.7அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும்முடிவே இராது.அவர் தாவீதின் சிங்காசனத்தையும்அவனது அரசையும் நிலைநாட்டுவார்.இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும்நீதியோடும் நேர்மையோடும்நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார்.எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம்இதை நிறைவேற்றும்.