1அந்த நாளிலே நீ:“யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.என்னில் கோபமாயிருந்தபோதிலும்,உமது கோபம் தணிந்துஎன்னைத் தேற்றியிருக்கிறீர்.2நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.3நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்துமகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.4அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது:“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.5யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்;உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.6சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”