ஏசாயா10tam_tcv
1அநீதியான சட்டங்களை இயற்றி,ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!2அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும்,என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும்,விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும்,அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.3உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும்,தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்?யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்?உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்?4கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும்,கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது.இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.