யாத்திராகமம்25tam_tcv
இறைசமுகக் கூடார காணிக்கைகள்
1யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:2“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். உள்ளத்தில் ஆர்வத்துடன் கொடுக்கும் ஒவ்வொருவனிடமிருந்தும் காணிக்கையை எனக்காக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.3“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவையே:“தங்கம், வெள்ளி, வெண்கலம்;4நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி; வெள்ளாட்டு உரோமம்,5சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்; சித்தீம் மரம்;6வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்; அபிஷேக எண்ணெய்க்கும் நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;7ஏபோத்திலும்,மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.8“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன்.9இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும்.