பிரசங்கி12tam_tcv
1நீ உன் வாலிப காலத்தில்உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்;துன்ப நாட்கள் வராததற்குமுன்னும்,“வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை”என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள்.2அதாவது சூரியனும், வெளிச்சமும்,சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும்,மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள்.3வீட்டுக் காவலாளிகள் தங்கள் முதுமையில் தள்ளாட,பெலமுள்ளவர் கூனிப்போய் ,அரைக்கும் பெண்கள் வெகுசிலராகி,ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள் ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள்.4வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டுஅரைக்கும் சத்தம் குறைந்துபோக,பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க,இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை.5மேடான இடங்களுக்கும்,வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும்,வாதுமை மரம் பூக்கும் முன்னும்,வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும்,ஆசையும் அற்றுப்போகுமுன்னும்,மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலேதுக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும்படைத்தவரை நினைவில்கொள்.6வெள்ளிக் கயிறு அறுந்து,தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும்,ஊற்றின் அருகே குடம் நொறுங்க,கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும்,7மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி,ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன்உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள்.8“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை!எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான்.