ஆமோஸ்2tam_tcv
1யெகோவா சொல்வது இதுவே:“மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச்சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.2மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன்.அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும்மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும்.3நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன்.அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்”என்று யெகோவா சொல்லுகிறார்.4யெகோவா சொல்வது இதுவே:“யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றியபோலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.5ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன்.அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”